மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக ஈராக்கின் எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு ஈராக் அரசு நன்றி தெரிவித்துள்ளது.

ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபுவாத் ஹுசைன், ஈரான் தூதருடன் நடைபெற்ற சந்திப்பில், இந்த அனுமதி இரு நாடுகளுக்குமான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய முடிவாகும் என்று கூறினார். மேலும், பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றும், போர் சூழலை தவிர்க்க அனைத்து தரப்பும் உரையாடலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உலக எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் இந்த அனுமதி, சர்வதேச சந்தையில் எரிபொருள் விநியோக நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் ஏற்றுமதி தடையின்றி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *